திரவுபதியம்மன் கோவில் கும்பாபிேஷகம்

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் திரவு பதியம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், திரவுபதியம்மன், பாண்டுரங்கர், அய்யனாரப்பன், பிடாரி யம்மன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா கடந்த 4ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி மாலை முதல்கால யாக பூஜை நடந்தது.

நேற்று முன்தினம் காலை இரண்டாம் காலயாக பூஜை, மாலை மூன்றாம் கால பூஜை, நேற்று காலை 6 மணிக்கு நான்காம் கால பூஜை, தொடர்ந்து கடம் புறப்பாடு, 9.05 மணிக்கு அய்யனாரப்பன் கும்பாபி ேஷகம், 9.30 மணிக்கு பிடாரியம்மன், 10.15 மணிக்கு மூலவர் கும்பாபி ேஷகம் நடந்தது.

விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து மகா தீபாரதனையும், இரவு சுவாமி வீதியலா நடந்தது.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Advertisement