லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

மந்தாரக்குப்பம் : நெய்வேலியில் லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் (தேர்வு) வைத்தியநாதன் தலைமை தாங்கினார். ரோட்டரி துணை ஆளுநர் பழனிவேல் முன்னிலை வகித்தார். முன்னாள் சங்க தலைவர் பவுல்ராஜ் வரவேற்றார். புதிய தலைவராக சீனிவாசன், பொது செயலாளராக சந்திரமவுலி, பொருளாளராக அருள்மணி பதவியேற்றனர்.
சிறப்பு விருந்தினர் ரோட்டரி ஆனந்தன், புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசி, புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து கொண்டார்.
10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முதியோர்களுக்கு சக்கரவண்டி, நிழற்குடை, அரிசி, வேஷ்டி, சேலை, பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள், துாய்மை பணியாளர்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.
வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், நாகரத்தினா, டாக்டர் இளங்கோவன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் குருமூர்த்தி, கோலப்பன், பாலாஜி, நடராஜன். சிவசங்கர், பரணிதரன், முருகானந்தம், ரமேஷ், மூர்த்தி, சிவராஜ், கார்த்திகேயன், மணிமாறன், பெரியசாமி, ஆல்பர்ட்ஜேசுதாஸ், அன்பு, ஊரணி அறக்கட்டளை நிறுவனர் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை