மூதாட்டியிடம் நகை 'அபேஸ்' பெண்ணாடத்தில் துணிகரம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே நுாதன முறையில் மூதாட்டியிடம் நகை 'அபேஸ்' செய்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமானுஜம் மனைவி சுந்தரவள்ளி, 80. இவர் நேற்று பகல் 12:00 மணிக்கு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பைக்கில் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், சுந்தரவள்ளியிடம் தங்களுக்கு அரசு வழங்கும் ஆதரவற்றோர் பணம் கிடைக்க செய்கிறோம். இதற்காக தங்களை ஒரு போட்டோ எடுத்துக்கொள்கிறேன் எனக் கூறினார்.

இதை நம்பிய மூதாட்டி தோடு, மூக்குத்தியை கழற்றி அருகில் வைத்தார். அப்போது, மர்மநபர் குடிக்க தண்ணீர் கேட்டதும் சுந்தரவள்ளி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வந்த பார்த்த போது, 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரை சவரன் நகை, டப்பாவில் வைத்திருந்த 500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர் திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement