விண்வெளிக்கு அனுப்பிய 166 பேரின் அஸ்தி கடலில் மூழ்கியது

ஹூஸ்டன்: விண்வெளிக்கு 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளுடன் சென்ற விண்கலம் பூமிக்கு திரும்பும்போது பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த, செலஸ்டிஸ் என்ற விண்வெளி நிறுவனம், புதிய வகை சேவையை வழங்கி வருகிறது. உயிரிழந்தவர்கள் விண்வெளியில் பயணித்தது போன்ற ஒரு நினைவை உண்டாக்கும் வகையில், இறந்தவர்களின் அஸ்தியை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

இந்த நிறுவனமும், ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த 'தி எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து, அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் - 9 ராக்கெட் வாயிலாக, 166 பேரின் அஸ்தி மற்றும் டி.என்.ஏ., மாதிரிகளை அனுப்பின.

இந்த விண்கலம், கடந்த மாதம், 23ல் விண்வெளிக்கு ஏவப்பட்டது. திரும்பும் வழியில் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாகவும், அதை மீட்க முடியவில்லை என்றும் செலஸ்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement