உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்

புதுடில்லி: 2024 ம் ஆண்டில் ,உலகின் 'பிசி'யான விமான நிலையங்களில் டில்லி விமான நிலையத்துக்கு 9வது இடம் கிடைத்துள்ளது.
சர்வதேச விமான கவுன்சில் அமைப்பு கடந்த 2024ம் ஆண்டில் உலகின் 20 'பிசி'யான விமான நிலையங்கள் பட்டியலை தயாரித்துள்ளது.
இப்பட்டியலில்,
அமெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. 10,80,67,776 பேரை கையாண்டுள்ளது.
2வது இடத்தில் துபாய் விமான நிலையமும்(9,23,31,506 பயணிகளை கையாண்டுள்ளது)
3வது இடத்தில் அமெரிக்காவின் டல்லாஸ் விமான நிலையம் (8,78,17,864 பயணிகளை கையாண்டு) உள்ளது.
டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 7,78,20,834 பயணிகளை கையாண்டு 9 வது இடத்தில் உள்ளது.
ஜப்பானின் ஹனிடா விமான நிலையம் 4வது இடத்திலும்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் 5வது இடத்திலும்
அமெரிக்காவின் டென்வர் விமான நிலையம் 6வது இடத்திலும்
துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையம் 7 வது இடத்திலும்
அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையம் 8 வது இடத்திலும் , சீனாவின் ஷாங்காய் விமான நிலையம் 10வது இடத்திலும் உள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்காவின் 6 விமான நிலையங்கள் இடம்பிடித்துள்ளன.
இது தொடர்பாக சர்வதேச விமான நிலைய கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச அளவில், 940 கோடி பேர் விமானங்களில் பயணித்துள்ளனர். இதில், முதல் 20 இடங்களில் இருக்கும் விமான நிலையங்கள் மட்டும் 15.4 கோடி பயணிகளை கையாண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும்
-
ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சல் சத்தீஸ்கரில் கைது
-
இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து
-
ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!
-
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு
-
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி