போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்

4

மதுரை: மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை இன்று (ஜூலை 08) ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்தார்.


சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் மரணமடைந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ''நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்த வேண்டும்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 08) விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் விசாரணையில் இளைஞர் உயிரிழந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் அறிக்கையை தாக்கல் செய்தார். ''அஜித்குமார் மரண வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மீதி விசாரணையை சி.பி.ஐ., மேற்கொள்ளும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.


சி.பி.ஐ., ஒரு வாரத்தில் விசாரணை அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் ஆகஸ்ட்20 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Advertisement