'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள்: 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன?

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்தடுத்து 'இந்தியன் 2, தக் லைப்' என இரண்டு பெரிய தோல்விகள். தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். அவருக்கு 'இந்தியன் 2, கேம் சேஞ்ஜர்' என அடுத்தடுத்து இரண்டு தோல்விகள். இந்தத் தோல்விகள் அவர்களை மட்டும் பாதிக்கவில்லை. தமிழ் சினிமாவையும் சேர்த்து பாதிக்க வைத்தது.
ஷங்கர், மணிரத்னம் ஆகியோருடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கூட்டணி அமைத்திருந்தார் கமல்ஹாசன். 1996ல் வெளிவந்த 'இந்தியன்' படத்திற்குப் பிறகு 28 ஆண்டு இடைவெளியில் ஷங்கருடனும், 1987ல் வெளிவந்த 'நாயகன்' படத்திற்குப் பிறகு 37 ஆண்டு இடைவெளியில் மணிரத்னத்துடனும் இணைந்த படங்கள் இப்படியொரு தோல்வியைத் தரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இதனால், ஷங்கர், மணிரத்னம், கமல்ஹாசன் ஆகியோரது அடுத்த படங்கள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
'இந்தியன் 2' வெளியீட்டிற்கு முன்னதாகவே 'இந்தியன் 3' குறித்த செய்திகள் வந்தன. பட வெளியீட்டிற்குப் பின்னர் 'இந்தியன் 3' குறித்து இதுவரையிலும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இன்னும் சில காட்சிகளை படமாக்க வேண்டிய உள்ளது என்று மட்டும் தகவல் வெளியாகி இருந்தது.
இப்போதுள்ள சூழ்நிலையில் 'இந்தியன் 3' படம் மீண்டும் ஆரம்பமாகுமா, அதை முடித்து வெளியிட சம்பந்தப்பட்டவர்கள் ஆர்வம் காட்டுவார்களா என்பது தெரியவில்லை. 'தக் லைப்' படத்தின் தோல்விக்குப் பிறகு அந்த ஆர்வம் நீடித்திருக்குமா என்பதும் புரியாத புதிர் தான்.
கமல்ஹாசனுக்கு அடுத்து ஒரு பிரம்மாண்ட வெற்றி தேவைப்படுகிறது. அந்த வெற்றிக்குப் பிறகு 'இந்தியன் 3' வருவதுதான் உகந்ததாக இருக்கும் என கோலிவுட்டில் நினைக்கிறார்கள்.
அதேப்போல் ஷங்கரும் அவரது அடுத்த கனவுப் படைப்பான 'வேள்பாரி' மூலம் மீண்டு வந்து பின்னர் 'இந்தியன் 3' படத்தை எடுக்கலாம் என கோலிவுட்டில் பேசுகிறார்கள்.











மேலும்
-
ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சல் சத்தீஸ்கரில் கைது
-
இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து
-
ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!
-
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு
-
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி