விராட் கோலி-அனுஷ்கா புகைப்படங்கள் வைரல்: விம்பிள்டனில் ஜோகோவிச் ஆட்டத்தை ரசித்தனர்

1


லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் ஆட்டத்தை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அவரது மனைவி அனுஷ்கா சர்மா நேரில் கண்டுகளித்தனர். இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

விம்பிள்டன் டென்னிஸ்



டென்னிஸ் விளையாட்டின் முக்கிய தொடராக பார்க்கப்படும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர், லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 1-6, 6-4, 6-4, 6-4 என, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியை முன்னாள் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் நேரில் கண்டுகளித்தார். போட்டி நடைபெற்றபோது ஜோகோவிச் பெறும் ஒவ்வொரு புள்ளிக்கும் அடிக்கடி ரோஜர் பெடரரை கேமராவில் காண்பித்தனர்.Latest Tamil News

அதேபோல், இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலியும், அவரது மனைவி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் ஜோகோவிச் ஆட்டத்தை பார்வையாளர் பகுதியில் இருந்து நேரில் கண்டுகளித்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


@block_P@அதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் நன்றி தெரிவித்துள்ளார். block_P

இவர்கள் இதற்கு முன்பு 2015ல் நடந்த விம்பிள்டன் போட்டியையும் நேரில் பார்த்துள்ளனர்.

Advertisement