திருச்சி விமான நிலையத்தில் 11.8 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்; இதன் மதிப்பு ரூ.11.8 கோடி!

6


திருச்சி: பாங்காக்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 11.8 கோடி ரூபாய் மதிப்புள்ள 11.8 கிலோ உயர் ரக கஞ்சா, திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கோலாலம்பூர் வழியாக, விமானத்தில் நேற்று திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.


அந்நபர், 11.8 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை, சீல் செய்யப்பட்ட பைகளில் எடுத்து வந்தது தெரியவந்தது. கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்நபரை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.


அண்மைக் காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.11.8 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement