எண்கள் சொல்லும் செய்தி

7.32



கடந்த ஜூன் காலாண்டில், எப்.எம்.சி.ஜி., எனப்படும் நுகர்பொருட்கள் துறையின் மதிப்பு வளர்ச்சி, கடந்தாண்டை காட்டிலும் 7.32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, சில்லரை நுண்ணறிவு தளமான பைஜோம் மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 லட்சம் விற்பனை நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இது கணக்கிடப்பட்டுள்ளது.

583



புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, ஸ்மார்ட்வொர்க்ஸ் கோவொர்க்கிங் ஸ்பேசஸ் நிறுவனம் 583 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது. இதற்கான பங்கு விற்பனை, நாளை மறுநாள் துவங்கி, வருகிற 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. பங்கு ஒன்றின் விலை 387 ரூபாயில் இருந்து 407 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement