பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: '' நாளை ( ஜூலை 09) நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' னெ தமிழக அரசு எச்சரித்துள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச சம்பள உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ( ஜூலை 9 ) பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழகத்தில், தி.முக.,வின் தொ.மு.ச., இடதுசாரிகளின் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யு.சி., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மக்களை பாதிக்காத வகையில், போககுவரத்து சேவை உள்ளிட்டவை வழக்கம் போல் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இந்த பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச்செயலர் எச்சரித்துள்ளார். சம்பள நிறுத்தம், துறைரீதியான நடவடிக்கை என ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

மேலும்
-
ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!
-
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு
-
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி
-
கூட்டு பாலியல் வன்கொடுமை: கால் இழந்தார் பாதிக்கப்பட்ட பெண்
-
ஏமன் சிறையில் கேரள நர்சுக்கு மரண தண்டனை: தேதி அறிவித்ததால் அதிர்ச்சி; காப்பாற்ற இறுதி கட்ட முயற்சி