இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!

போபால்: மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானம், புறப்பட்ட 30 நிமிடங்களில் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்திய பிரதேசம் இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று (ஜூலை 08) காலை 6.30 மணிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான 6E-7295 விமானம் 51 பயணிகளுடன் புறப்பட்டது. ஆனால் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, புறப்பட்ட 30 நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, விமானி இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக விமானத்தை தரையிறக்க முடிவு செய்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, விமானம் மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் பத்திரமாக காலை 7:15 மணிக்கு விமானம் இந்தூரில் தரையிறங்கியது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட உடன் பயணிகள் பீதி அடைந்தனர்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி தோல்வியில் முடிந்தது. இறுதியாக, விமான நிறுவனம் விமானத்தை ரத்து செய்தது. பயணிகளின் டிக்கெட்டுகளுக்கான பணமும் திருப்பித் தரப்பட்டது. இதன் பின்னர், பொறியாளர்கள் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும்
-
தமிழகத்தை படுபாதாளத்துக்கு தள்ளியது தான் ஸ்டாலின் மாடல் சாதனை: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றால்...: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
-
நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்
-
சீனா-நேபாள எல்லையில் மண் சரிவு: 17 பேர் மாயம்
-
'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள்: 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன?
-
உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்