மண், மழை, மக்கள்-- =கோவா மண் திருவிழா

கோவா என்றால் கடலும், கடல் சார்ந்த ஆன்மீக தலங்களும், குறைந்த விலையிலான, வித்தியாசமான மதுவும்தான் அனைவருக்கும் நினைவிற்கு வரும்,ஆனால் அதை எல்லாம் தாண்டி அங்குள்ள மக்கள் தங்கள் மண்ணை எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது பலருக்கு தெரியாது.
அதை தெரியப்படுத்துவதுதான் 'சிக்கால் காலா' எனப்படும் மண் திருவிழாவாகும்.கோவாவின் ஒற்றுமையையும், மண்ணுக்கான மரியாதையும் கொண்டாடும் ஒரு தனிச்சிறப்பான திருவிழாவாகும்.
ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்த விழா இப்போது சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் விதமாக மாறிவருகிறது.
அப்படி என்ன அந்த விழாவில் நடக்கிறத?
கோவாவின் மண்ட்ரே கிராமத்தில் ஒரு மழைக்காலத்தில் கூடும் மக்கள் அங்குள்ள மண்ணில் பலவித விளையாட்டுகளை வயது வித்தியாசமின்றி விளையாடுகின்றனர்,மண்ணில் சறுக்கிச் செல்கின்றனர்,அதை எடுத்து அடுத்தவர் மீது வலிக்காமல் வீசிக் கொள்கின்றனர்,
விழா காலையில் கிருஷ்ணன் கோவிலில் பூஜையுடன் துவங்குகிறது.கிருஷ்ண பக்தர்கள் பழைய பராம்பரியமான வீரமிகு ஆடைகள் அணிந்து கொண்டு வீணை, தாளம், உடுக்கை போன்ற இசைக்கருவிகளுடன் ஊர்வலம் வருகின்றனர்.
கோயிலுக்கு அருகிலுள்ள களிமண் நிலத்தில் உடல் திறனைக்காட்டும் பலவித நிகழ்வினை நிகழ்த்துகின்றனர்.சிறியவர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இதில் பங்கேற்கின்றனர்.இது நட்பு, ஒற்றுமை மற்றும் இயற்கையை எப்படி அணுகுகிறார்கள்,மதிக்கிறார்கள் என்பதை உலகிற்கு பறைசாட்டுகிறது.
தொடர்ந்து பாரம்பரிய நடனங்கள், பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. மண், மழை, மக்கள் - மூன்றும் ஒன்று சேரும் இந்த விழா பலரை ஈர்த்துவருகிறது.
கோவாவின் மக்களை புரிந்து கொள்ளவும்,மாணவர்களும் இளையவர்களும் இயற்கையை உணர்ந்து கொள்ளவும் இந்த விழா பெரிதும் பயன்படுகிறது.
எப்படி செல்லலாம்?
தலைநகர் பனாஜியில் இருந்து 30-35 கி.மீ.,துாரத்தில் உள்ளது மண்ட்ரோ கிராமம்.பஸ்கள், கார்கள், டாக்சி வசதிகள் உள்ளன.
இது போல் மண்ணோடு இணைந்த கலாசாரத்தையும் கொண்ட இந்த விழாவினை வாய்ப்பிருப்பவர்கள் பார்த்து மகிழலாம்.
-எல்.முருகராஜ்
மேலும்
-
ஏ.எஸ்.பி.,யைக் கொன்ற நக்சல் சத்தீஸ்கரில் கைது
-
இத்தாலி விமான நிலையத்தில் பரபரப்பு; விமான இன்ஜினுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு; விமான சேவைகள் ரத்து
-
ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!
-
பிரதமர் மோடிக்கு 114 குதிரைகளுடன் சிறப்பு வரவேற்பு
-
மகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் தந்தை கைது
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: பாலஸ்தீனர்கள் 18 பேர் பலி