ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டம் விதிகளுக்கு முரணானது: அன்புமணி போட்டி தீர்மானம்

2


சென்னை: '' ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு முரணானது, '' என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் அன்புமணி தலைமையில் நடந்த பா.ம.க., கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.


பா.ம.க.,வில் கட்சி நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அன்புமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களை ராமதாஸ் நியமித்து வருகிறார். ஆனால், இந்த உத்தரவு செல்லாது என அன்புமணி கூறி வருகிறார்.
இதனிடையே, அன்புமணி தலைமையிலான 21 பேர் கொண்ட நிர்வாக குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவை ராமதாஸ் அறிவித்தார். இக்குழுவின் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில், பொதுவெளியில் ராமதாஸ் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்று, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.


இதனைத் தொடர்ந்து, அன்புமணி தலைமையில் பா.ம.க., நிர்வாக குழு கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில்,

* பா.ம.க., பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டவர் அன்புமணி.

* ராமதாஸ் தலைமையில் நடக்கும் கூட்டங்கள் பா.ம.க., விதிகளுக்கு எதிரானது.

* வன்னியர்களுக்கு இட ஒதுககீடு வழங்காததை தி.மு.க., அரசை கண்டித்து ஜூலை 20ல் போராட்டம்

* அன்புணமியின் செயல்பாடுகளுக்கு துணை நிற்போம்

*அன்புமணி , வடிவேல் ராவணன் இல்லாமல் செயல்படும் கூட்டம் சட்ட விதிகளுக்கு முரணானவை என்பன உள்ளிட்ட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement