கூட்டு பாலியல் வன்கொடுமை: கால் இழந்தார் பாதிக்கப்பட்ட பெண்

பானிபட்: பானிபட் ரயில் நிலையத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண், ஒரு கால் இழந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹரியானா மாநிலம் பானிபட் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி, தன் கணவனுடன் சண்டையிட்டு வெளியே சென்ற 35 வயது பெண்ணை சந்தித்த ஒருவர், தான் உங்கள் கணவர் தான் அனுப்பினார் என்று பொய்யாக கூறி, நம்பவைத்து, அங்கு நின்றிருந்த ரயிலின் காலிபெட்டியில் அந்த பெண்ணிற்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, தண்டவாளத்தில் வீசப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண், ரயில்பாதையில் இருந்த டிராக்கில் சிக்கி ஒரு காலை இழந்தார். அதை தொடர்ந்து அந்த பெண்ணின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு விரைந்த ரயில்வே போலீசார் சோனிபட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பட்டு அங்கிருந்து ரோஹ்தக் பி.ஜி.ஐ.,க்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த சம்பவம் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஸ்ரீ நிவாஸ் கூறியதாவது:

எங்களுக்கு கடந்த ஜூன் 26 ஆம் தேதி அன்று, தன் மனைவி காணாமல் போனதாக அவளது கணவர் புகார் அளித்தார். அதில் கடந்த 24 ஆம் தேதி என்னுடைய மனைவி என்னுடன் தகராறு செய்து வெளியே சென்றுவிட்டாள், அவள் இதற்கு முன்பும் இதேபோல் போயிருந்தாலும் வழக்கமாக வீட்டிற்கு திரும்பிவிடுவாள். தற்போது அவள் வீட்டிற்கு வரவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் விசாரணை மேற்கொண்டதில், பாதிக்கப்பட்ட பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரியவந்தது.

அந்த பெண்ணிடம் கேட்டபோது, தன்னிடம் எனது கணவர் அனுப்பியதாக கூறிய ஒருவர், என்னை அழைத்துசெல்வது போல் நாடகமாடி, பானிபட் ரயில்நிலையத்தில் நின்றிருந்த காலியான பெட்டியில் பாலியல் வன்கொடுமை செய்தார். அதனை தொடர்ந்து மேலும் இருவர் அவருடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் என்னை அருகில் இருந்த தண்டாவளத்தில் வீசினர். அப்போது தண்டவாளத்தில் சிக்கி எனது காலை இழந்தேன் என்று கூறினார். இந்நிலையில் எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளோம். மேல் நடவடிக்கைக்காக பானிபட் ரயில்வே போலீசிற்கு தகவல் தெரிவித்திருக்கிறோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர்வாசிகள் மற்றும் கடைக்காரர்களையும் விசாரித்து, அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றோம். இச்சம்பவத்தில் தொடர்புள்ளவர்களை விரைவில் பிடித்துவிடுவோம்.

இவ்வாறு ஸ்ரீ நிவாஸ் கூறினார்.

Advertisement