ஏடிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை 5500 பேர்: சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் சிறப்பாக நடந்தேறியது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ம் தேதி நடந்தது. எதிர்பார்த்தபடியே லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடினர்.
சிறிய நகரமான திருச்செந்தூர் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்று சுவாமி தரிசனத்திற்கு பிறகு பத்திரமாக மீண்டும் வழியனுப்பி உள்ளது. இதற்கு காரணம் ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே போலீசாரால் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் தான்.
கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரடியாக களம் இறங்கினார். தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, மதுரை டிஐஜி அபிநவ் குமார், திருநெல்வேலி டிஐஜி சந்தோஷ் ஹதிமணி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் ஒன்பது எஸ்.பிகள், 32 கூடுதல் எஸ்.பி.க்கள், 73 டிஎஸ்பிகள் 87 இன்ஸ்பெக்டர்கள் என 5500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்.



கும்பாபிஷேகம் முடிந்ததும் கூட்டம் அலைமோதிக்கொண்டு வெளியேற எத்தனிக்கும் நேரத்திலும் பெரிய தள்ளுமுள்ளு இல்லாமல் கூட்டம் கலைய துவங்கியது. பிக்பாக்கட்ள், திருடர்களை கண்காணிக்க வழக்கம் போல வெளி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடிய இடத்திலும் பெரிய அளவில் நகை பறிப்பு சம்பவங்கள் இல்லை. மொபைல், பர்ஸ், நகை காணாமல் போனதாக மொத்தமே நான்கு புகார்கள் மட்டுமே கோவில் போலீசுக்கு வந்துள்ளன.
திருச்செந்தூர் கும்பாபிஷேகம் முடிந்த மறு தினம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்திலும் இதே போல வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால் அங்கும் தேரோட்டம் சிறப்பாக நடந்தது.மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரளும் பகுதிகளில் ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்து விடுகின்றன. ஆனால் தமிழகத்தில் போலீசாரின் திட்டமிட்ட முன்னேற்பாடு காரணமாக சம்பவம் எதுவும் இன்றி சிறப்பாக நடந்தது திருச்செந்தூர் கும்பாபிஷேகம்.




மேலும்
-
பல்லாங்குழியாக மாறிய சாலை ஆற்பாக்கத்தில் விபத்து அபாயம்
-
முதல்வர் ஸ்டாலினுடன் திருமா சந்திப்பு ஏன்?
-
திருப்புலிவனத்தில் 2 கோவில்கள் புதுப்பிக்க தேர்வு
-
குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
-
மத்துாரை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்கள்
-
பஸ் படிக்கட்டில் சிக்கிய வேட்டியால் இழுத்து செல்லப்பட்ட மேஸ்திரி காயம்