வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

திருப்பூர்; இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், ஊத்துக்குளி ஆர்.எஸ்., கிளை மாநாடு நடந்தது. தாலுகா குழு உறுப்பினர் சதாம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலமுரளி, மாநாட்டை துவக்கி வைத்தார்.

ஊத்துக்குளி ஆர்.எஸ்., ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும். ஈரோடு செல்லும் அனைத்து பஸ்களும், ஆர்.எஸ்., வழியாக சென்று வருவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

காங்கயம் ரோடு, ரயில்வே மேம்பாலத்தில் தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்; ரோட்டோரம் குப்பை கொட்டுவதை தடுத்து, சுகாதார சீர்கேட்டை போக்க வேண்டும். ஊத்துக்குளி பகுதியில், இளைஞர்களுக்கான விளையாட்டு மைதான வசதி ஏற்படுத்த வேண்டும்.

தாலுகா கிளையின் தலைவராக சஞ்சீவ், கிளை செயலாளராக சதாம், தணை தலைவர்களாக சூர்யா, சதீஷ், இணை செயலாளர்களாக நவீன், பாசித் மற்றும் 16 பேர் கொண்ட நிர்வாக கமிட்டியும் புதிதாக தேர்வு செய்யப்பட்டது.

Advertisement