அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய நகராட்சி தலைவியின் கட்டடம் இடிப்பு

சோளிங்கர்,சோளிங்கர் நகராட்சி தலைவி, தக்கான் தீர்த்த குளம் அருகே ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை, வருவாய் துறையினர் நேற்று இடித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி. இவர், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, சோளிங்கர் நகராட்சி தலைவராக உள்ளார். இவரது கணவர் அசோகன், தி.மு.க.,வில் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரை அருகே, அரசுக்கு சொந்தமான சாலை புறம்போக்கு புலம் எண்: 645/ 2ஏ என்ற இடத்தில், 3,135 சதுரஅடி பரப்பளவை ஆக்கிரமித்து, நகராட்சி தலைவி தமிழ்ச்செல்வி, இரண்டு அடுக்கு கட்டடத்தை கட்டி வருகிறார்.
இது தொடர்பாக, சமூக ஆர்வலர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கில், ஆக்கிரமிப்பு செய்துள்ள கட்டடத்தை இடித்து அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி, நகராட்சி கமிஷனர் நந்தினி தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கட்டடத்தை இடித்து அகற்றும் பணியில், நேற்று ஈடுபட்டனர்.
இந்த இடத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய். சம்பவ இடத்தில், சோளிங்கர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும்
-
தமிழக சிறைகளில் கண்காணிப்பாளர் பதவிக்கு ஆள் இருக்கு... ஆனால் நியமனம் இல்லை
-
சிவகாசியில் இளநிலை உதவியாளர் குழாய் திறப்பாளர் சஸ்பெண்ட்
-
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் நீட்டிப்பு எப்போது?
-
புதிய ரேஷன் கார்டு கேட்டு 1.10 லட்சம் பேர் காத்திருப்பு
-
சி.இ.ஓ., ஆபீஸை முற்றுகையிட்ட மாணவர்கள்; போலீசார் துாக்கி வீசியதால் தள்ளுமுள்ளு
-
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு; ஆறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை