புதிய ரேஷன் கார்டு கேட்டு 1.10 லட்சம் பேர் காத்திருப்பு

சென்னை : மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்க்கும் பணி துவங்கி உள்ளதால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்தவர்கள், அதை விரைவாக வழங்கும்படி, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் தனி சமையல் அறையுடன் வசிக்கும் குடும்பத்தினருக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் சராசரியாக, 40,000 குடும்பங்களுக்கு, ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வந்தன. 2023ல், மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய்உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அமலானது.
அதனால், திருமணமாகி கூட்டு குடும்பமாக வசித்தவர்கள், உரிமைத்தொகை பெறுவதற்காக, புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர். எனவே, ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, மீண்டும் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், பல முறை ஆய்வு செய்த பிறகே வழங்கப்படுவதால், ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்தவர்களில், 1.10 லட்சம் பேர் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன.
அவர்கள் எல்லாம் தங்கள் விண்ணப்பங்களை ஏற்று, விரைவில் ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், கூடுதல் பயனாளிகளை சேர்க்க, வீடுதோறும் விண்ணப்ப படிவம் வழங்கும் பணி நேற்று முன்தினம் முதல் துவங்கியுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க, ரேஷன் கார்டு அவசியம் என்பதாலும், விரைவாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர்.

மேலும்
-
அச்சு முறிந்ததால் விபரீதம் சுவாமியுடன் சாய்ந்தது தேர்
-
குஜராத்தில் பாலம் இடிந்ததில் 9 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்
-
விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்
-
பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு
-
‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
-
ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி