மத்துாரை புறக்கணிக்கும் அரசு, தனியார் பஸ்கள்
போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி- - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை பணி கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்து, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இதில், கிருஷ்ணகிரி அடுத்த, மத்துார் பகுதி மற்றும் சுற்று வட்டாரத்திலுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வரும் மக்கள், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரூ உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லவும், தர்மபுரி, திருப்பத்துார் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து மத்துாருக்கு வரும் மக்கள், இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லவும், ஒரு ஜங்ஷன் பகுதியாக மத்துார் உள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி - -திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும், விழுப்புரம், சேலம் கோட்ட அரசு பஸ்கள், மத்துாருக்குள் வராமல், புதியதாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது.
இதனால் மத்துார் பஸ் ஸ்டாண்டில், தினமும் காலை நேரங்களில் அரசு பணிகள், அவசர தேவைகளுக்கு வெளியூர் செல்லும் மக்கள், மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
'விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்'
-
ஒரே நாளில் மூன்று கும்பாபிஷேகம்: ஆசிர்வதித்த காஞ்சி மடாதிபதிகள்
-
சர்ச்சுக்கு போகும் உயரதிகாரி; சஸ்பெண்ட் செய்தது திருப்பதி தேவஸ்தானம்
-
வீராணம் ஏரியில் இருந்து வெள்ளாற்றில் 360 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
-
கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு
-
பணம் கிடைக்காத விரக்தி ஒருவர் தற்கொலை