பணம் கிடைக்காத விரக்தி ஒருவர் தற்கொலை  

கடலுார் : கடலுார் அருகே மகளின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் கிடைக்காத விரக்தியில் தந்தை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த கண்ணாரப்பேட்டை கே.புதுாரைச் சேர்ந்தவர் சதீஷ்,38. இவரது மகளுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய 35 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்பட்டது. அந்த பணம் கிடைக்காத மன விரக்தியில் இருந்தவர், நேற்று காலை 6:00 மணிக்கு கொண்டங்கி ஏரி புருகீஸ் பேட்டை பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement