கும்பாபிேஷக விழாவில் பெண்களிடம் நகை திருட்டு

கடலுார் : கடலுார் கோவில் கும்பாபிஷேகத்தில் பெண்கள் அணிந்திருந்த நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கடலுார் மாவட்டம், கடலுார் அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜி,80; இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். அப்போது, கூட்ட நெரிசலில் அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் தங்க செயின் திருடு போனது.

இதேப் போன்று, சிதம்பரத்தைச் சேர்ந்த சரசு,65, என்பவர் அணிந்திருந்த 4 சவரன் செயினும் திருடுபோனது தெரிந்து. இருவரும் அளித்த புகாரின் பேரில், கடலுார் துறைமுகம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். திருடு போன நகைகள் மதிப்பு 4.50 லட்சம் ரூபாய் ஆகும்.

Advertisement