குளத்தை சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

உத்திரமேரூர்:-புலிவாய் பொதுக்குளத்தை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

உத்திரமேரூர் ஒன்றியம், புலிவாய் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

இங்குள்ள, புத்தளி சாலையோரம் பொது குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

இந்த குளத்து தண்ணீர் கால்நடைகளுக்கு குடிநீராகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், பொது குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தின் கரையில் கருவேல மரங்கள், செடிகள் வளர்ந்து உள்ளன.

மேலும், குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கோரை புற்களும் வளர்ந்து வருகின்றன. தற்போது, குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

எனவே, மழைக்காலம் தொடங்குவதற்கு முன், குளத்தை துார்வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement