ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி

12


திண்டிவனம்: திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்திற்கு முன், ராமதாஸ் - அன்புமணி இணைய வலியுறுத்தி, 5 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


திண்டிவனம் அருகே ஓமந்துாரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று காலை, பா.ம.க., மாநில செயற்குழு கூட்டம், நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அன்புமணி பங்கேற்கவில்லை.


இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணிக்கு, தைலாபுரம் தோட்டத்திற்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த 5 பேர், திடீரென அதை உடலில் ஊற்றிக்கொண்டு கோஷம் போட்டனர். அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர்.


அந்த ஐந்து பேரும், செயற்குழு கூட்டத்தில் அன்புமணி பங்கேற்காதது எங்களுக்கு வருத்தைத்தை ஏற்படுத்தியது. ராமதாஸ் - அன்புமணி இணைந்து பணியாற்ற வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர்.


விசாரணையில், அவர்கள் வந்தவாசி அருகே உள்ள கீழக்கொண்டநல்லுார் கிராமத்தை சேர்ந்த பா.ம.க.வினர் தமிழ்ச்செல்வன், கார்த்திக், விஜயன், ஜெகதீசன் என தெரிய வந்தது. தீக்குளிப்பு பின்னணியில் யாராவது உள்ளனரா என கிளியனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement