விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்

15


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சாரங்கபாணிபேட்டையில், 400 ஆண்டுகள் பழமையான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, கிராம மக்கள் சொந்த செலவில் திருப்பணி செய்துள்ளனர்.

இதை ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று பார்வையிட்டு, கிராம மக்களை பாராட்டினார். பின், அவர் அளித்த பேட்டி:
காசி விஸ்வநாதர் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஆனாலும், திருப்பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. இருந்தபோதும், அந்த நிதியை எதிர்பாராமல், கிராம மக்கள், தாங்களே ஒன்று சேர்ந்து நிதி திரட்டி, கோவிலை புதுப்பித்துள்ளனர். திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் உள்ளது.



இதே கிராமத்தில், திருப்பணி நடைபெற்று வரும் வரதராஜ பெருமாள் கோவில் அருகில், குளக்கரையில் சிலர் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர். இதனால், அக்குளத்தில், நீராடும் பெண்கள், குழந்தைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது; அதனால், அதை அகற்ற வேண்டும்.



@quote@கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்றும் முயற்சி நடந்து வருகிறது. இந்தாண்டிலும், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் அடுத்தாண்டு குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களிலும் தேசிய கொடி ஏற்ற முயற்சிப்போம். கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என்பதை அறிவிக்கவே இந்த முயற்சி.quote

கடந்த 1972ல், தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தின் பிரதான கோவில்கள் முன்பு, ஈ.வே.ரா., சிலைகள் அமைக்கப்பட்டன. அந்த சிலைகளை அகற்றுவதோடு, பக்தர்கள் மனதை புண்படுத்தும் விதமாக, அதில் உள்ள நாத்திக வார்த்தைகளை நீக்க வேண்டும். அந்த சிலைகளை அகற்றும் வரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement