லாரி மோதி குழந்தை பலி

குளித்தலை, ஜூலை 9

குளித்தலை அடுத்த, சிந்தாமணிப்பட்டி கீழப்பகுதியை சேர்ந்தவர் பல்கீஸ்பேகம். இவரது பேத்தி அல்மாஸ்பானு, 3. நேற்று முன்தினம் மதியம், 3:30 மணியளவில் சிந்தாமணிபட்டி பஸ் நிறுத்தம் அருகே, பல்கீஸ்பேகம் பேத்தியுடன் நின்று கொண்டிருந்தார்.


அப்போது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற லாரி, குழந்தை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. சிந்தாமணிபட்டி போலீசார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் முத்துராஜா, 31, மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement