கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்



கரூர்,:கரூர், மேலப்பாளையம் கிராமத்தில், தட்டையநாடு புலியூர் பெருங்குடி குடிப்பாட்டு மக்களின், குலதெய்வமான எல்லை அரசு கருப்பண்ண சுவாமி, முச்சிலியம்மன், கன்னி விநாயகர், கருப்பண்ணசுவாமி, நுாதன சிவலிங்கம் மற்றும் விமான ராஜகோபுர சகல பரிவார கோவில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.


அதிகாலை காலை, 4:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடந்தது. அதிகாலையிலிருந்தே குடும்பம் குடும்பமாக கும்பாபிஷேகத்தை காண வரத் தொடங்கினர். எல்லையரசு கருப்பண்ண சுவாமி கோவிலில் அமைந்துள்ள கலசங்களுக்கு காலை, 5:30 மணிக்கு மேல் புனித தீர்த்தம் ஊற்றப்பட்டது. 9:00 மணிக்கு மேல் முச்சிலியம்மன் சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மலர்கள் துாவப்பட்டது. புனித தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தை பெருங்குடி குலகுருக்கள் வெண்ணெய்மலை சிதம்பர சுப்ரமண்ய தீட்சிதர் குழுவினர், கபிலர்மலை செல்வகபில சிவாச்சாரியார் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள்அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி, முச்சிலியம்மன் கோவில் அறங்காவலர் பவர்டெக்ஸ் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள், குடிப்பாட்டு மக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 1ம் தேதி முதல் நேற்று மாலை வரை அன்னதானம் நடந்தது. கும்பாபிஷேக குழு தலைவர் பழனியப்பன், கோவில் தர்மகர்த்தா ஆகியோர் வருகை தந்த உறவினர்கள், நண்பர்கள், பக்தர்கள் மற்றும் அனை
வரையும் வரவேற்றனர்.
செந்தில்கணேஷ்- ராஜலெட்சுமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வாண வேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் தட்டைய
நாட்டு புலியூர் பெருங்குடி குல குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர்.

Advertisement