விடுபட்ட சுற்றுச்சுவர் பணி விரைந்து முடிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:அரசு பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கருதி, விடுபட்ட சுற்றுச்சுவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தில், சாலையை ஒட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மூன்று பக்கமும் சுற்றுச்சுவர் உள்ள நிலையில், ஒரு பக்கம் மட்டும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது.

சுற்றுச்சுவருக்கான துாண்கள் மட்டுமே அமைத்ததோடு, எஞ்சிய பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் ஆடு, மாடு, நாய் உள்ளிட்டவை பள்ளி வளாகத்திற்குள் உலாவுவதால், பள்ளி மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, விடுபட்ட ஒரு பக்க சுற்றுச்சுவர் பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement