காசிபாளையம்---வெள்ளையம்பட்டி ரோடு சேதம்

வேடசந்துார்: காசிபாளையம் முதல் வெள்ளையம்பட்டி செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதால் ரோட்டை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் ரோட்டை விரைந்து புதுப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வேடசந்துார் ஒன்றியம் கல்வார்பட்டி ஊராட்சி காசிபாளையத்திலிருந்து மட்டப்பாறை கோயில், வெள்ளையம்பட்டி வழியாக எல்லைப்பட்டி பிரிவு வரை உள்ள 5 கி.மீ., துாரம் உள்ள தார் ரோடு சேதமடைந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட இந்த ரோடு பல இடங்களில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த வழித்தடத்தில் தான் கூம்பூர் பகுதியில் இருந்து காசிபாளையம் நெடுஞ்சாலை பகுதிக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. வேடசந்துார் கரூர் நெடுஞ்சாலை பகுதியில் நுாற்பாலைகள் நிறைந்துள்ள நிலையில் கூம்பூர் பகுதியில் இருந்து தொழிலாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் வந்து செல்கின்றன. பள்ளி கல்லுாரி வாகனங்கள் மட்டுமின்றி சிங்கிலிக்காம்பட்டி சென்று வரும் அரசு டவுன் பஸ், பால் வேன் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன.
போக்குவரத்து நிறைந்த கிராம சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் வெள்ளையம் பட்டியில் இருந்து பூணுாத்து சென்று மீண்டும் காசிபாளையம் வந்து வேடசந்தூர் சுற்றி செல்கின்றனர். இதை கருதி காசிபாளையம் வெள்ளையம்பட்டி ரோட்டை புதுப்பித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
சிரமத்தில் மாணவர்கள்
ஆர்.ராமர், கொத்தனார், வெள்ளையம்பட்டி: ரோட்டை புதுப்பித்து பத்து ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இந்த வழியாகத்தான் வெள்ளையம்பட்டி எல்லைப்பட்டி, நடுப்பட்டி, கூம்பூர் செல்லலாம். கூம்பூரில் இருந்து காசிபாளையம் வழியாக வேடசந்தூர் செல்லும் மக்களுக்கு மிகக் குறுகிய தூரமாக அமையும். காலை, மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரி மாணவர்கள் நடந்தும், டூவீலரிலும் செல்வதில் சிரமப்படுகின்றனர். இதை கருதி ரோட்டை விரைந்து புதுப்பிக்க வேண்டும்.
லாரிகளால் மேலும் சேதம்
பி.செல்லத்துரை, தொழிலாளி, வெள்ளையம்பட்டி: இங்கு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக சமீப காலமாக எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகள் கூடுதலாக செல்கின்றன. இதனால் இந்த ரோடு முழு சேதம் அடைந்து விட்டது. ஒன்றிய, மாவட்ட அதிகாரிகள் இந்த வழியாக வந்து ரோடுகளை பார்வையிட வேண்டும். அப்போதுதான் இப் பகுதி மக்கள் படும் சிரமம் புரியும். டூவீலர்கள், பள்ளி ,கல்லுாரி மாணவர்கள் பஸ் போக்குவரத்து, வாகனப் போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டை இப்பகுதி மக்களின் நலன் கருதி விரைந்து புதுப்பிக்க வேண்டும் என்றார்.
மேலும்
-
டில்லியில் நிலநடுக்கம்; நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளில் நிலஅதிர்வு!
-
நாய்க்கடியால் வந்த விபரீதம்; எம்.பி.ஏ., பட்டதாரி உயிரிழப்பு
-
பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
-
சண்டையின் ரகசியம் இது தானா ?
-
வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை