போலீஸ் செய்திகள்...

தேனி: போடேந்திரபுரம் பாண்டிசெல்வம் 42. மூன்று ஆண்டுகளுக்கு முன் இவரின் வீட்டில் அதேப் பகுதியை சேர்ந்த அப்பு, சோலை தீ வைத்தனர். வீரபாண்டி போலீசில் வழக்குப்பதிந்து விசாரணை நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இந் நிலையில் அப்பு, சோலை ஆகிய இருவர் மூன்று ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் போடேந்திரபுரத்திற்கு வந்தனர். இருவரும் இணைந்து பாண்டிசெல்வத்தை அசிங்கமாக பேசி தகராறு செய்தனர். பாண்டிச்செல்வம் தனது சகலை செல்லையாவுடன் டூவீலரில் சென்ற போது, அப்பு டூவீலரை வழிமறித்து, கீழே தள்ளி கத்தியால் தாக்கினார். தகராறை விலக்கிவிட வந்த பெண்ணை, சோலை கையை கடித்து காயத்தை ஏற்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட பாண்டிச்செல்வம் புகாரில் வீரபாண்டி போலீசார் அப்பு, சோலை ஆகிய இருவர் மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இப்பிரச்னையில் போடேந்திரபுரம் கிழக்குத்தெரு சோலை 55, புகாரில், பாண்டிசெல்வம், கிருபாகரன், அன்னம்மாள், பரமேஸ்வரி, செல்லையா, காளீஸ்வரி, ஜெயபிரகாஷ் ஆகிய 7 பேர் வீட்டை உடைத்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை எடுத்து சென்று கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement