இலவச உபகரணங்கள் வழங்க முகாம்

தேனி: தேனி வீரபாண்டி பைபாஸ் ரோட்டில் உள்ள எல்.எஸ்., மில் வளாகத்தில் ஜூலை 12,13ல் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடக்கிறது. இந்த முகாமில் மில்நிர்வாகம், சென்னை பிரீடம் டிரஸ்ட் சார்பில் மாற்றுத்திறனாளிகள், சர்க்கரை நோய், விபத்தினால் கை, கால் இழந்தவர்கள், காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது.

முகாமில் பரிசோதனைகள் செய்யப்பட்டு செயற்கை கால், கை, காது கேட்கும் கருவிகள் ஆக.,ல் இலவசமாக வழங்கப்பட உள்ளது. முகாமிற்கு வருபவர்கள் புகைப்படம், ஆதார்நகல் கொண்டு வர வேண்டும்.

முகாமில் பங்கேற்க வசதியாக கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளில் இருந்து இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என எல்.எஸ்., மில் நிர்வாக இயக்குநர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisement