போலீசார் தாக்குதல் மா.கம்யூ., கண்டனம்

விழுப்புரம் : விழுப்புரம் ரயில் நிலையத்தில் விவசாய தொழிலாளர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, விவசாயிகள் சங்கம் உள்ளிட்டவைகள் சார்பில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில், ஏ.டி.எஸ்.பி., தினகரன் மைக்கில், மறியலில் ஈடுபட முயல்பவர்களை அடித்து இழுத்து வாருங்கள் என சத்தமாக உத்தரவிட்டார்.

அதனால் போராடியவர்களை தள்ளி, அராஜக போக்கில் செயல்பட்டு, தடியடி தாக்குதலை நடத்தி, வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் சேகர், முருகன், பிரகாஷ், மதன்ராஜ் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராடும் உரிமையை, மாவட்ட போலீசார் தடுத்து, தாக்குதல் நடத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

Advertisement