புவனகிரி குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டி  

புவனகிரி: புவனகிரி குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டிகள் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

புவனகிரி குறுவட்ட அளவில் மாணவிகளுக்கான தடகள போட்டிகள் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு 100 மீட்டர், 200, 400 , 800, 1500 மற்றும் 3000 மீட்டர் ஒட்டப்பந்தயங்கள், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

போட்டிகளை உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்கள் நடத்தினர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக பூதங்குடி ப்ரைம் சியோன் மெட்ரிக் பள்ளி நிர்வாக இயக்குநர் சுஜின் மற்றும் இணை இயக்குநர் தீபாசுஜின் ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

விழாவிற்கான ஏற்பாடு களை புவனகிரி குறுவட்ட இணை செயலர் இராமசாமி தலைமையிலான ஆகிரியர் குழுவினர் செய்திருந்தார்.


@block_B@

புவனகிரியில் விளையாட்டு



மைதானம் தேவை புவனகிரிபகுதியில் தடகளப் போட்டி நடத்த விளையாட்டு மைதானம் இல்லாததால் அரசு வழிகாட்டி நெறிமுறை படி அறிவிக்கும் விளையாட்டு போட்டிகளை, புவனகிரி குறு வட்டதை்தை சேர்ந்தவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் அவலம் பல ஆண்டுகளாக நீடிக்கிறது, புவனகிரியில் இதற்கான விளையாட்டு அரங்கம் ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.block_B

Advertisement