இன்றைய வைரல்: விம்பிள்டன் போட்டியில் ஜான்வி கபூர்

லண்டன்: லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் போட்டியை நடிகை ஜான்வி கபூர், அவரது ஆண் நண்பருடன் ரசித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கோலாகலமாக நடந்து வருகிறது. லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் 'நடப்பு சாம்பியன்' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் மோதினர். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய அல்காரஸ், 2வது செட்டை 5-7 என போராடி இழந்தார். பின் எழுச்சி கண்ட அல்காரஸ், 3வது செட்டை 6-3 என தன்வசப்படுத்தினார்.
'டை பிரேக்கர்' வரை சென்ற 4வது செட்டில் மீண்டும் அசத்திய அல்காரஸ் 7-6 என வென்றார்.
கடந்த சில நாட்களாக பல கட்ட போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதும் உள்ள பிரபலங்கள் பங்கேற்று போட்டியை ரசித்து வருகின்றனர்.
நேற்று தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான, நடிகை ஜான்வி கபூர், அவரது நெருங்கிய ஆண் நண்பர் ஷிகர் பஹாரியாவுடன் இணைந்து போட்டியை ரசித்து பார்த்தார். இந்த படங்கள் சமூகவலை தளங்களில் வைரலானது. பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.


மேலும்
-
திருமலா பால் நிறுவன அதிகாரியை போலீசார் மிரட்டவில்லை: சென்னை போலீஸ் கமிஷனர்
-
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி
-
விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு
-
வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு
-
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,
-
அரசியல் கட்சித் தலைவர் மாடுகளை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறார்; அண்ணாமலை கிண்டல்