சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி

சென்னை: சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்படவிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் 217 பேர் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட தயாரானது. விமானத்தில் பயணிகள் 217 பேர் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு திடீரென தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனால் விமானம் புறப்படாமல் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
கடைசி நேரத்தில் தொழில் நுட்பக் கோளாறு விமானி கண்டறிந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி பழுதை நிபுணர்கள் சரி செய்தனர்.
பழுதுபார்க்கும் பணியின் போது 217 பயணிகளும் விமானத்திற்குள் அமர்ந்திருந்தனர். இது சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இதனால் பயணிகள் அனைவரும் கடும் அவதி அடைந்தனர். பின்னர் விமானம் வழக்கமான நேரத்தை விட தாமதமாக காலை 11.30 மணிக்கு சிங்கப்பூருக்குப் புறப்பட்டது. அண்மை காலங்களாக விமானத்தில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும்
-
போலி எக்ஸ் கணக்குகளால் இந்தியாவுடனான உறவுக்கு ஆபத்து; எச்சரிக்கும் ஈரான் தூதரகம்
-
டிரம்ப் நிர்வாகத்துடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி; ரூ.1,700 கோடியை செலுத்த முன்வரும் கொலம்பியா பல்கலைக்கழகம்
-
கர்நாடகாவில் குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண் மீட்பு!
-
ஹிமாச்சலை புரட்டிப்போடும் கனமழை; இதுவரையில் 92 பேர் பலி
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது: இ.பி.எஸ்.,
-
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்