விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு

புதுடில்லி: '' ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையை நிராகரிக்கிறோம்,'' என இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பான ஏஏஐபி விசாரணை நடத்துகிறது. முதற்கட்ட விசாரணை அறிக்கையை அந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில்,இதுதவிர, விமானிகளின் கடைசி நேர கலந்துரையாடல் பற்றியும், அவர்களின் பேசியதில் இடம்பெற்ற விஷயங்கள் என்ன என்பது பற்றியும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 இன்ஜின்களும் செயலிழந்துள்ளது. ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளித்துள்ளார் என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக இந்தியா விமானிகள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விசாரணை நடக்கும் தொனியும், திசையும், விமானிகள் மீது தான் தவறு என்ற ஒரு தலைபட்சமாக செல்கிறது. இந்த அனுமானத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். உண்மையான ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பொறுப்பான அதிகாரி கையெழுத்து அல்லது ஒப்புதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. விசாரணை ரகசியமாக நடைபெறுவதால், அதில் வெளிப்படைத்தன்மை இல்லாததுடன், அதன் நம்பகத்தன்மை மற்றும் பொது மக்களின் நம்பிக்கையை குறைக்கிறது. அனுபவம் வாய்ந்த விமானிகள் இன்னும் விசாரணைக்குழுவில் சேர்க்கப்படவில்லை. இவ்வறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.











மேலும்
-
கர்நாடகாவில் குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண் மீட்பு!
-
ஹிமாச்சலை புரட்டிப்போடும் கனமழை; இதுவரையில் 92 பேர் பலி
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது: இ.பி.எஸ்.,
-
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்
-
உலகின் மிகப்பெரிய உட்புற பொழுதுபோக்கு அம்சத்தை நியூ ஜெர்சியின் எடிசனில் கொண்டு வந்த ஆல்பட்ராஸ்
-
மெக்சிகோ, ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% வரி; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!