உலக தலைவர்கள் பேச்சு: நாகரீகம் போச்சு!

இப்போதெல்லாம் சில உலக தலைவர்களின் பேச்சு, அநாகரீகத்தின் உச்சமாகவும் தெருச் சண்டையைவிட கேவலமாகவும் இருக்கிறது. அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வந்த பிறகு உலக நாடுகளை குழாயடி சண்டைக்களமாக மாற்றி விட்டார்.
முன்பெல்லாம் ஒரு நாடு செய்வது இன்னொரு நாட்டுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஐ.நா.,விடம் முறையிடுவார்கள். அல்லது தங்கள் வெளியுறவு துறை மூலம் நாகரீகமான வார்த்தைகளில் அறிக்கையாக தருவார்கள் அல்லது சம்மந்தப்பட்ட நாட்டின் துாதரை அழைத்து கண்டனம் தெரிவிப்பார்கள்.
அந்தந்த நாட்டு அதிபர்களோ, பிரதமர்களோ நேரடியாக பிரச்னை பற்றி வாய் திறப்பது அரிது. ஆனால் அத்தனையையும் மாற்றி விட்டார் டிரம்ப்.
தனக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக ‛‛ஈரான் நாட்டு தலைவர் கொலை செய்யப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். இதைப் பார்த்து மற்ற தலைவர்களும் இதே போல பேசத் துவங்கி விட்டனர். வீட்டில் சூரிய குளியல் எடுக்கும்போது டிரம்ப்பை ட்ரோன் மூலம் கொலை செய்வது சுலபம் என்கிறார்'' ஈரான் நாட்டு தலைவர். பதிலுக்கு ‛‛ஈரான் நட்டு தலைவர் கொல்லப்படுவார்'' என்று பீதியை கிளப்புகிறார் இஸ்ரேல் பிரதமர்.
அதோடு நின்றாரா ட்ரம்ப். ‛‛இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் வரியை பல மடங்கு உயர்த்துவோம். என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்'' என்று மிரட்டுகிறார்.
சொந்தமாக மல்யுத்த சண்டை அணியை (WWF) நடத்தி வந்ததாலோ என்னவோ, அந்த போட்டிகளில் கலந்துகொள்வோர் பேசுவது போலவே, உலக நாடுகளையும் பேசுகிறார்.
@block_B@இவர்களைப் பார்க்கும்போது நமது இந்திய தலைவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. பாகிஸ்தானுடன் ஆயிரம் பிரச்னை இருந்தாலும், அந்நாட்டு பிரதமரை கொலை செய்வோம், கழுத்தறுப்போம் என்றெல்லாம் நமது தலைவர்கள் பேசுவதில்லை. block_B
நாகரீகமான சமுதாயம், தனி மனித உரிமை, முழு கல்வி அறிவு பெற்றவர்கள் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள், நாகரீகத்தில் இந்தியாவை விட கீழான நிலையில் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்.





மேலும்
-
ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்
-
திருமலா பால் நிறுவன அதிகாரியை போலீசார் மிரட்டவில்லை: சென்னை போலீஸ் கமிஷனர்
-
சென்னை-சிங்கப்பூர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; பயணிகள் 217 பேர் கடும் அவதி
-
விமான விபத்து அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய விமானிகள் சங்கம் நிராகரிப்பு
-
வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கைகள்: தமிழகத்திலும் அமல்படுத்த உத்தரவு
-
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம்: விசாரணையை துவக்கியது சி.பி.ஐ.,