ஜூலை 14ல் பூமி திரும்பியதும் 7 நாட்கள் சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்; ஏற்பாடுகள் தீவிரம்

புதுடில்லி: ஜூலை 14ம் தேதி பூமி திரும்பியதும், இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா ஏழு நாட்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின், டிராகன் விண்கலம் வாயிலாக, ஆக்சியம் மிஷன் 4 திட்டத்தில், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 18 நாள் ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு வரும் ஜூலை 14ம் தேதி அன்று இந்திய நேரப்படி மாலை 4:35 மணிக்கு சுபன்ஷு
சுக்லா தலைமையிலான குழுவினர் பூமி திரும்புகின்றனர் என நாசா தெரிவித்துள்ளது.
க்ரூ டிராகன் விண்கலம் ஜூலை 15ம் தேதி அன்று மாலை 3 மணிக்கு கலிபோர்னியா கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. க்ரூ டிராகன் விண்கலம் பூமிக்கு திரும்பிய பிறகு, பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவரது உடலை சரிசெய்ய உதவும் வகையில், ஏழு நாட்கள் சுபன்ஷு சுக்லா மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
சுபன்ஷு சுக்லாவின் ரூ. 550 கோடி முதலீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணி, இந்தியாவின் மனித விண்வெளிப் பயண லட்சியங்களுக்கு, குறிப்பாக 2027ல் மேற்கொள்ளப்பட இருக்கும், ககன்யான் திட்டத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, சுபன்ஷு சுக்லாவின் உடல்நலம் மற்றும் உளவியல் தகுதியை இஸ்ரோவின் அறுவை சிகிச்சை நிபுணர்கள் உன்னிப்பாகக் கண்காணித்தனர்.
அவர் பூமி திரும்பியதும் தீவிர மருத்துவ கண்காணிப்பு செய்ய ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும்
-
போலி எக்ஸ் கணக்குகளால் இந்தியாவுடனான உறவுக்கு ஆபத்து; எச்சரிக்கும் ஈரான் தூதரகம்
-
டிரம்ப் நிர்வாகத்துடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி; ரூ.1,700 கோடியை செலுத்த முன்வரும் கொலம்பியா பல்கலைக்கழகம்
-
கர்நாடகாவில் குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண் மீட்பு!
-
ஹிமாச்சலை புரட்டிப்போடும் கனமழை; இதுவரையில் 92 பேர் பலி
-
மக்கள் செல்வாக்கை தி.மு.க., இழந்துவிட்டது: இ.பி.எஸ்.,
-
ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டும்; பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கடிதம்