‛‛இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்...'': கண்ணீர் மல்க ‛புது குண்டு' போட்ட வனிதா

14

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி, கதை நாயகியாக நடித்த ‛மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படம் நேற்று வெளியானது. சென்னை, கமலா தியேட்டரில் படம் பார்க்க வந்த வனிதாவிடம் ''உங்க படத்தில் இடம் பெற்ற சிவராத்திரி' பாடலை பயன்படுத்தக் கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வனிதா, ‛‛தெய்வமே இப்படி செய்யலாமா? நாங்க அந்த பாடலுக்கு முறைப்படி சோனி மியூசிக் நிறுவனத்திடம் பணம் கொடுத்து அனுமதி வாங்கினோம். அவர்களுக்கும், இளையராஜா தரப்பும் இன்னும் பிரச்னை. இவர்களும் எங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறார்கள். நான் ஒரு வீடு வாங்குகிறேன்.

பில்டரிடம் பணம் கொடுக்கிறேன். அப்போது இன்னொருவர் இந்த மனை எங்களுடையது என வந்தால் என்ன செய்ய முடியும். நான் அமைதியாக இருக்கிறேன். இளையராஜா வீட்டில் அவர் மனைவி ஜீவா அம்மாவிடம் லாக்கர் சாவி வாங்கி, நகையெல்லாம் எடுத்து அம்மனிடம் போட்டு பூஜை பண்ணியிருக்கேன். அந்த வீட்டுக்கு நிறைய உழைச்சிருக்கேன். இளையராஜா வீட்டுக்கு மருமகள் ஆக வேண்டியது. இதற்குமேல் பேச விரும்பவில்லை'' என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

Latest Tamil News

@block_G@

என்ன பிரச்னை



சில நாட்களுக்கு முன்பு இந்த பாடல் விவகாரத்தில் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதற்காக, இளையராஜாவை நேரில் சந்தித்து விஷயத்தை சொல்லி, காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார் வனிதா. இவ்வளவு நடந்ததும் இளையராஜா வழக்கு போட்டு உள்ளார். என்ன பிரச்னை என்று ராஜா தரப்பில் விசாரித்தால், ''அந்த பாடல் விவகாரத்தில் வனிதா வந்து பேசினார்.

ஆனாலும், சோனிக்கும் அவர் தரப்புக்கும் சட்ட சிக்கல் நீடிக்கிறது. கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இவருக்காக விட்டால், மற்ற பாடல்களும் ரைட்ஸ் பிரச்னை வரும். இந்த படத்தின் போஸ்டர் பப்ளிசிட்டியில் இளையராஜா போட்டோ, பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த படம் ஒரு மாதிரியான அடல்ட் கன்டன்ட் படம், இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் என்ற தோற்றத்தை வனிதா உருவாக்கி உள்ளார். அதனால், அந்த பாடலை பயன்படுத்தக்கூடாது என்று சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். ஆபாச படத்தில் ராஜா பாடல் இடம் பெறுவது சரியில்லை'' என்கிறார்கள். block_G

Latest Tamil News

சரி, இளையராஜா வீட்டுக்கு மருமகள் என எந்த அர்த்தத்தில் வனிதா பேசினார் என்று விசாரித்தால், பலருக்கும் குழப்பம். இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என 2 மகன்கள். இதில் யாருக்கு அவரை திருமணம் செய்ய நினைத்தார்கள். யாருடன் காதல் இருந்தது அல்லது இளையராஜா குடும்பத்தில் யாருடனாவது வனிதாவை திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடந்ததா? அப்போது என்ன நடந்தது என பலரும் துப்பறிந்து வருகிறார்கள்.

Advertisement