ஹிமாச்சலை புரட்டிப்போடும் கனமழை; இதுவரையில் 92 பேர் பலி

1

மாண்டி: ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92ஆக அதிகரித்துள்ளது.


ஹிமாச்சல பிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, மேகவெடிப்பு காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுவரையில் வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளில் மட்டும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நிலச்சரிவு காரணமாக 249 சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதில் மாண்டி மாவட்டத்தில் மட்டும் 207 சாலைகள் பெரும் சேதமடைந்துள்ளன.


இது குறித்து மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் (SEOC) கூறியிருப்பதாவது; ஜூன் 20ம் தேதி முதல் தொடங்கிய பருவமழையால், ரூ.751 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன. 463 மின் மின்மாற்றிகள் மற்றும் 781 நீர் வழங்கல் திட்டங்கள் தற்போது செயல்படவில்லை.இந்தப் பருவமழையின் போது 26 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மொத்தம் 22 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு, 31 இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, 17 இடங்களில் மிகப்பெரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஹிமாச்சலில் உள்ள 12 மாவட்டங்களில் பல இடங்களில் ஜூலை 18ம் தேதி வரையில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement