மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: ஒருவர் கைது

1

கூடலூர் : கூடலூரில், மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.


நீலகிரி மாவட்டம், கூடலூரை சேர்ந்தவர் கலாநிதி, 33. இவர் தனியார் டி.வி., சேனலுக்கு கூடலூர் பகுதியில் நிருபராக பணியாற்றி வருகிறார். இவர், கூடலூரை சேர்ந்த 28 வயது மாற்றுத்திறனாளி பெண்ணுடன், வாட்ஸ் ஆப் வீடியோ காலில் பேசி வந்துள்ளார். இன்று, இவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று, தனியாக இருந்த அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக, கூடலூர் அனைத்து மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து, விசாரணை பின், கலாநிதியை கைது செய்தனர்.

Advertisement