போலி எக்ஸ் கணக்குகளால் இந்தியாவுடனான உறவுக்கு ஆபத்து; எச்சரிக்கும் ஈரான் தூதரகம்

புதுடில்லி: போலி சமூக வலைதள கணக்குகளால் இந்தியா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான உறவுகளுக்கு ஆபத்து என்று இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான போரின் போது, ஈரானில் உள்ள அணுசக்தி நிலைகள் மீது பி2 வகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்திற்கு, பிறகு ஈரான், அமெரிக்கா இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்காக இந்திய வான்வெளியை அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரபரப்பட்டன.
இதனிடையே, இந்தியாவுடனான உறவை சீர்குலைக்கும் விதமாக, போலி சமூக வலைதள கணக்குகள் மூலம் அவதூறுகள் பரப்பப்படுவதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது. சில போலி கணக்குகளின் விபரங்களை தங்களின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஈரான் ராணுவம் மற்றும் அமைச்சகங்களின் பெயரில், அதிகாரப்பூர்வ பக்கங்களைப் போல தோற்றமளிக்கும் விதமாக, ப்ளூ டிக்குடன் போலி கணக்குகளின் மூலம் அவதூறு பரப்பப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரான் அரசு பெயரில் ப்ளூ டிக்குடன் இருக்கும் ஒரு போலி கணக்கில், "அமெரிக்க பி2 வகை குண்டுகளை வீசும் விமானங்கள் ஈரானைத் தாக்குவதற்காக, இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியது தெரியவந்த பிறகு, ஈரான் இந்தியாவுடனான சபஹார் துறைமுகம் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்கிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரான் - இந்தியா இடையிலான நட்புறவை கெடுக்கும் விதமாக, பல போலி சமூக வலை கணக்குகள் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வ கணக்குகளைப் போல சித்தரிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்த போலி கணக்குகள் ஈரானுக்கு சொந்தமானவை அல்ல என்றும் ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும்
-
ரிதன்யா வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க கோரி தந்தை மனு
-
தாடி வைத்த புகைப்படத்தால் சந்தேகம் குரூப் - 4 தேர்வு எழுத வந்த நபர் தவிப்பு
-
வால்பாறையில் உலாவிய புலி தோட்டத் தொழிலாளர்கள் அச்சம்
-
உடைமாற்றும் காட்சியை படம் பிடித்ததால் ஆத்திரம் உதவியாளரை கொன்று கூவத்தில் வீசிய கொடூரம் பவன்கல்யாண் கட்சி பெண் நிர்வாகி உட்பட 5 பேர் கைது
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்ததால் கனடா பல்கலையில் 10,000 பேர் நீக்கம்
-
காசா நிவாரண முகாம்களில் 6 வாரங்களில் 798 பேர் பலி