விம்பிள்டன் பைனல்: சாதிப்பாரா அல்காரஸ்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பைனலில் ஸ்பெயினின் அல்காரஸ் அசத்தினால் 'ஹாட்ரிக்' கோப்பை வெல்லலாம்.
லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இன்று உலகின் 'நம்பர்-1' இத்தாலியின் ஜானிக் சின்னர் 23, 'நம்பர்-2' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் 22, மோதுகின்றனர்.
அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்சை வீழ்த்திய அல்காரஸ், விம்பிள்டனில் தொடர்ந்து 3வது முறையாக (2023-2025) பைனலுக்கு முன்னேறினார். இதில் 2 முறை (2023-24) கோப்பை வென்றிருந்தார். ஏ.டி.பி., ஒற்றையரில் தொடர்ச்சியாக 24 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வரும் அல்காரஸ், விம்பிள்டனில் தொடர்ந்து 20 போட்டிகளில் வென்றுள்ளார். இவரது வெற்றிநடை இன்றும் தொடர்ந்தால் விம்பிள்டனில் தனது 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லலாம்.
முதல் பட்டம்: அரையிறுதியில், 7 முறை விம்பிள்டன் கோப்பை வென்ற செர்பியாவின் ஜோகோவிச்சை வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள சின்னர், விம்பிள்டனில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். தொடர்ந்து 4வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு (2024ல் யு.எஸ்., ஓபன், 2025ல் ஆஸி., ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன்) முன்னேறிய சின்னர் இன்று எழுச்சி கண்டால், விம்பிள்டனில் தனது முதல் பட்டத்தை ருசிக்கலாம். தவிர, பிரெஞ்ச் ஓபன் பைனலில் (2024) அல்காரசிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுக்கலாம்.
இதுவரை
ஏ.டி.பி., ஒற்றையரில் 12 முறை மோதிய போட்டியில் அல்காரஸ் 8, சின்னர் 4ல் வென்றனர். சின்னருக்கு எதிராக கடைசியாக விளையாடிய 5 போட்டியிலும் அல்காரஸ் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறார்.
* கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 5வது முறையாக மோதுகின்றனர். முன்னதாக விளையாடிய 4 போட்டியில் அல்காரஸ் 3, சின்னர் ஒரு போட்டியில் வென்றனர்.
நடால்-பெடரர் வழியில்
கடந்த 2006, 2007, 2008ல் நடந்த பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் பைனலில் ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மோதினர். இதுபோல, இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பைனலில் மோதிய அல்காரஸ், சின்னர், தற்போது விம்பிள்டன் பைனலிலும் விளையாடுகின்றனர்.
* கடைசியாக நடந்த 6 கிராண்ட்ஸ்லாம் தொடரில், சின்னர் 3, அல்காரஸ் 3 என, 6 பட்டம் கைப்பற்றினர். முன்னதாக நடால், பெடரர், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இப்படி ஆதிக்கம் செலுத்தினர்.
மேலும்
-
பானி பூரி விற்றிருப்பார் த.வெ.க., விஜய்
-
ரூ.35 கோடி மதிப்பிலான சீன பட்டாசுகள் பறிமுதல்
-
வங்கி முன்னாள் மேலாளர் 71 வயதில் சி.ஏ., தேர்ச்சி
-
'நம்பர் ஒன்' முதல்வர் என்ற கனவுலகில் வாழும் ஸ்டாலின்:நயினார் நாகேந்திரன் விமர்சனம்
-
மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுங்கள்; நாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்
-
கடத்த முயன்ற ஆட்டோ டிரைவரை 'காம்பசால்' குத்தி தப்பிய மாணவி