காற்றுக்கு மரம் சாய்ந்து டூவீலர் சேதம்



சேந்தமங்கலம், சேந்தமங்கலம் - ராசிபுரம் பிரதான சாலையில், அரச மரம் பஸ் ஸ்டாண்டுக்கு அடுத்துள்ள வே பிரிட்ஜ் அருகே, பழமைவாய்ந்த வேப்ப மரம் ஒன்று இருந்தது. கடந்த, இரண்டு நாட்களாக சேந்தமங்கலம் பகுதியில் காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு, வீசிய பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வேப்பமரம் வேரோடு சாய்ந்தது. இதில், மர நிழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலர் மீது மரம் சாய்ந்து வாகனம் சேதமானது.

Advertisement