சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது

மாண்டியா: நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாண்டியாவில் உள்ள பிளைவுட் கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக, பீஹார் மாநிலத்திலிருந்து இளம் தம்பதி வந்தனர். இவர்களுக்கு நான்கு வயது மகள் உள்ளார். நேற்று வீதியில் விளையாடி கொண்டிருந்தார். பெற்றோருடன் வேலை பார்க்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரவீன், 21, அங்கு வந்தார். சாக்லேட் கொடுப்பதாக கூறி, அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியுடன் இருந்த வாலிபரை பிடித்து, போலீசில் பெற்றோர் ஒப்படைத்தனர்.

Advertisement