கைதான வாலிபர் 45 பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது அம்பலம் 

பெங்களூரு:பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கைதான வாலிபர், 45 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தது அம்பலமாகி உள்ளது.

பெங்களூரில் பொது இடங்களில் நடந்து செல்லும் பெண்கள், காதலனுடன் தனியாக இருக்கும் இளம்பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்ட குர்தீப்சிங் என்பவரை, பனசங்கரி போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அவரது மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்த போது, இளம்பெண்கள், சிறுமியர் என 12 பேரின் ஆபாச வீடியோக்கள் இருந்தது. குர்தீப்சிங்கிடம் விசாரித்த போது 45 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்ததையும், இதில் 33 பெண்களின் ஆபாச வீடியோவை அழித்ததாகவும் கூறினார்.

பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து, அவர்களுக்கு அனுப்பி குர்தீப்சிங் பணம் பறித்து இருக்கலாம் என்றும், பணம் கிடைத்த பின் ஆபாச வீடியோவை அழித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். விசாரணை நடக்கிறது.

Advertisement