'மாஸ்டர் பிளான்' அறிக்கையில் புது யோசனைகள்; ரூ.56 ஆயிரத்து, 669 கோடிக்கு திட்டங்கள் பரிந்துரை

கோவை,: வரும், 2041ல் எதிர்பார்க்கப்படும் உத்தேச மக்கள் தொகைக்கேற்ப வெளியிடப்பட்ட கோவைக்கான, 'மாஸ்டர் பிளான்' அறிக்கையில், 56 ஆயிரத்து, 669 கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக, வளர்ந்து வரும் பெரிய நகராக கோவை உருவெடுத்துள்ளது. அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முழுமைத் திட்டம் எனப்படும் 'மாஸ்டர் பிளான்' அவசியம்.
1994க்கு பின், 'மாஸ்டர் பிளான்' புதுப்பிக்கவில்லை. தொழில்துறையினர், விவசாயிகள், தன்னார்வ அமைப்பினர், கட்டுமான துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர், அவற்றின் அவசியத்தை வலியுறுத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுத்ததை தொடர்ந்து, 2041ல் இருக்கும் உத்தேச மக்கள் தொகையை கணக்கிட்டு, நகரின் வளர்ச்சியை, நகர ஊரமைப்புத் துறை மதிப்பிட்டுள்ளது.
எதிர்காலத்துக்கு ஏற்ற பரிந்துரைகள்
அதன்படி, எதிர்கால வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு வசதிகளை எந்தளவுக்கு மேம்படுத்த வேண்டும் என்கிற முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது.
கரவழி மாதப்பூரில், 219 ஏக்கருக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா, சாலை விரிவாக்கம், 114 கி.மீ.,க்கு வட்டச்சாலைகள், நான்கு வழித்தடங்களில் புதிய சாலை இணைப்புகள், ரயில்வே மேம்பாலங்கள், புதிய பஸ் ஸ்டாண்ட்டுகள் ஏற்படுத்துதல், நடைபாதைகளை மேம்படுத்துதல், சரக்கு வாகனங்களுக்கு முனையம் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், மொத்தம், 56 ஆயிரத்து, 669 கோடி ரூபாய்க்கு, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இவற்றை மூன்று கட்டமாக செயல்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள, 'மாஸ்டர் பிளான்', வரப்போகும், 15 ஆண்டுகளை கணக்கிட்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் கூட, ஐந்தாண்டுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வாறு செய்யும்போது, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தரவுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
உள்ளூர் திட்ட குழும பகுதிக்குள் அனைத்து துறைகளின் முன்னேற்றம், நில பயன்பாடு, கூடுதல் குடியிருப்பு உருவாக்கம், வாகன நிறுத்துமிடங்கள், நில மதிப்பு, சமூக வசதிகள், போக்குவரத்து, புதிய சாலைகள், தெருக்கள் போன்ற விபரங்களை பதிவு செய்ய தரவுத்தளம் உருவாக்க வேண்டும். இது வளர்ச்சியை கண்காணிக்கவும், 'மாஸ்டர் பிளான்' அறிக்கையை மறுஆய்வு செய்யவும் உதவும். இதற்கு, உள்ளூர் திட்ட குழுமத்தில் பிரத்யேக ஊழியர்களுடன் ஒரு தனிப்பிரிவு அல்லது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் வருகை 3.92 கோடியாக அதிகரிக்கும்!
ஆன்மிகம், இயற்கை சூழல், மருத்துவம் மற்றும் கல்வி சார்ந்த சுற்றுலா அனுபவங்களை ஒருங்கே வழங்கும் நகராக கோவை விளங்குகிறது. 2024ல் ஆண்டு முழுவதும், 77.6 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். 2041ல், 3.92 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் சத்திரங்கள் உட்பட, 3,000க்கும் மேற்பட்ட தங்கும் அறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. 2041ல் பயணிகள் வருகை அதிகரிக்கும்போது, 12,112 அறைகள் கூடுதலாக தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்ய, தோராயமாக, 503 தங்கும் விடுதிகள் புதிதாக உருவாக்க வேண்டும்.
அறிவு மற்றும் கல்வி சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், 30 கி.மீ., நீளத்துக்கு அருங்காட்சியக சுற்றுலா பாதை முன்மொழியப்பட்டு உள்ளது. வனத்துறை அருங்காட்சியகம், வேளாண் பல்கலை பூச்சியல் அருங்காட்சியகம், ஜி.டி.நாயுடு அருங்காட்சியகம், மண்டல அறிவியல் மையம், காவல்துறை அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் அருங்காட்சியகம் ஆகிய முக்கிய அறிவுசார் மையங்களை இணைக்கும் வகையில் உருவாக்க வேண்டும்.
நகர எல்லையோர பகுதிகளில் பசுமை விடுதிகள், வேளாண் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். 'கோவை விழா'வை, நகரின் தனித்துவமான ஆண்டு விழாவாக முறைப்படுத்த வேண்டும்.
கொங்கு மண்டலத்துக்கே உரிய, தனித்துவமான சமையல் மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்களை வெளிக்கொணரும் வகையில், சிறப்பு விழாக்கள் நடத்த வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
@block_B@
l வடிவமைப்பு துறையில் புதுமைகளை ஊக்குவிக்க, தேசிய வடிவமைப்பு நிறுவனம் அமைக்க வேண்டும் l பேஷன் டெக்னாலஜியில் கல்வி மற்றும் திறனை மேம்படுத்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி நிறுவ வேண்டும் l வளர்ந்து வரும் தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்த,, தொழில்-கல்வி நிறுவனங்களுக்கு இடையே கூட்டு செயல்பாடுகளை அதிகரிக்க, இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்த வேண்டும் l மின்சார வாகனம், மருத்துவ தொழில்நுட்பம், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் உணவு செயலாக்க தொழிற்சாலை போன்ற எதிர்கால வேலைகளுக்கு ஏற்ப, உள்ளூர் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். block_B
மேலும்
-
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற கடினமாக உழைக்க வேண்டும்; கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
-
வயது ஒரு தடையில்லைங்க... நீட் தேர்ச்சி பெற்ற மூத்த குடிமக்கள் 3 பேர் எம்.பி.பி.எஸ்.,க்கு விண்ணப்பம்!
-
கடலில் மூழ்கிய இலங்கை படகு; சுற்றுலா பயணிகள் உயிர் தப்பிய திக்...திக்...காட்சி!
-
செஞ்சி கோட்டை பெருமைக்கு 348 ஆண்டுகளுக்கு முன்பே அடித்தளமிட்ட சத்ரபதி சிவாஜி
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்