அரசு திவாலாகி கோவில் நிதியை எடுக்கிறதோ? மத்திய அமைச்சர் முருகன் கேள்வி

சென்னை : ''கோவில் நிதியை எடுத்து செலவு செய்யும் அளவுக்கு தி.மு.க., அரசு திவாலாகி விட்டதா?'' என, மத்திய அமைச்சர் முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூர், ஐ.சி.எப்., வளாகத்தில், மத்திய அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், 249 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பின், மத்திய அமைச்சர் முருகன் அளித்த பேட்டி:
அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி ஆட்சி குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன சொல்கிறாரோ, அது தான் முடிவு. அவர் எங்கள் தேசிய தலைவர்; அவர் சொல்வதே வேத வாக்கு. எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறது.
கூட்டணி குழப்பம் குறித்து, தி.மு.க.,விடம் கேளுங்கள். எப்போது அந்த கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்ற சூழலில் திருமாவளவன் இருக்கிறார்; வைகோவும் அதே நிலையில் இருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் அத்தகைய சூழலில் இருப்பதால், தி.மு.க., கூட்டணியே சுக்குநுாறாக உடையப் போகிறது.
இறை நம்பிக்கை இல்லாத அரசு, கோவில்களை விட்டு வெளியே வர வேண்டும். கோவில் நிதி, அறம் சார்ந்து பயன்படுத்தப்பட வேண்டும்.
கோவிலில் இருந்து எடுத்து, அரசு செலவு செய்கிறது என்றால், மற்ற நிதி எங்கே போனது; அரசு திவால் ஆகி விட்டதா? கோவில் நிதியில் இருந்து பள்ளி, கல்லுாரிகளை கட்டும் நிலையில் தான் தி.மு.க., அரசு இருக்கிறதா?
அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றதாக தி.மு.க., அரசு உள்ளது. தம்பிகளை எப்படி காப்பது, தம்பிகளை எப்படி பலப்படுத்துவது, தம்பிகளிடம் எப்படி பணிகளை பிரித்துக் கொடுப்பது என, முதல்வர் இருக்கிறார்.
தற்போதைய அரசின் திட்டங்கள் எல்லாமே, கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டமாகவும், மத்திய அரசின் திட்டங்களாகவும் தான் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
அடங்காத 'வீலிங்' மோகம் பரவும் வீடியோ
-
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை விழா வள்ளி கல்யாண உத்சவம் கோலாகலம்
-
அர்த்தநாரீஸ்வரர் பற்றி ஹரிபிரசாத் கிண்டல் திருநங்கைகள் அறக்கட்டளை கண்டனம்
-
'நைஸ்' ரோடு சுங்க கட்டணம் செயலர், இயக்குநர் மோதல்
-
ஷராவதி பாலத்துக்கு எடியூரப்பா பெயர் வைக்க ஐகோர்ட்டில் மனு
-
உடற்கல்வி வகுப்புகள் மாணவர்கள் புறக்கணிப்பு?