அரசு பள்ளிகளை மேம்படுத்தலாம் வாங்க! தொழில் நிறுவனங்கள் பங்களிக்க எதிர்பார்ப்பு

திருப்பூர் : 'தொழில் நிறுவனங்கள் நிறைந்த திருப்பூரில், தமிழக அரசின் 'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' திட்டத்தின் கீழ், அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்பட வேண்டும்' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சமூக மற்றும் தனிப்பட்ட மக்களின் பங்களிப்புகளை ஒருங்கிணைத்து, அதன் வாயிலாக, அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,'நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி' என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் படி, பொதுமக்கள் தங்கள் பங்களிப்புகளை பொருளாகவோ, பணமாகவே அல்லது களப்பணி வாயிலாகவோ செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது. திருப்பூர் கலெக்டர் மனீஸ் நாரணவரே அறிக்கை:
நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் வாயிலாக திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, திருப்பூரில் நிறைந்திருக்கும் குறு, சிறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனத்தினர், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் முன்வரலாம்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் முதல் பட்டதாரி மாணவர்கள், பள்ளி படிப்புக்கு பின், முதன்மை கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை தொடர்வதற்கான உதவியை பணமாக, 'லேப் டாப்' உள்ளிட்ட கல்வி உபகரணங்களாக வழங்கலாம்.
ஒவ்வொரு பள்ளிக்கான தேவைகளும், அந்தந்த பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் தலைமையாசிரியரால் உறுதிசெய்யப்பட்ட பிறகே, அதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பங்களிப்பாளர்களுக்கு கல்வித்துறையால் வழங்கப்பட்ட பயனீட்டு சான்றிதழ், வரி விலக்கு மற்றும் பாராட்டு சான்றிதழை பதவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
எப்படி பங்களிப்பது?
தங்களது பங்களிப்பை http://nammaschool.tnschool.gov.in/#/ என்ற இணையதளத்தின் வாயிலாக, மாநிலம் முழுக்க, தங்களுக்கு விருப்பமான பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அப்பள்ளியின் தேவைகளை பூர்த்தி செய்யலாம். இணைய தளத்தில், நன்கொடையாளர்களுக்கான, பிரத்யேக 'டேஷ்போர்டு' வழங்கப்படும். இதன் வாயிலாக, பங்களிப்பாளர்கள் தங்களது பங்களிப்பு எந்தெந்த வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படையாக தெரிந்துக் கொள்ள முடியும்.
மேலும் விவரங்களுக்கு, 63853 13047 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது
-
கைதான வாலிபர் 45 பெண்களை ஆபாச வீடியோ எடுத்தது அம்பலம்
-
பார்வையற்ற பயணியர் உதவிக்காக 'ஆன் போர்டு' திட்டம் விஸ்தரிப்பு
-
மோட்டார் பம்ப் கட்டடத்தில் ஓய்வெடுக்கும் சிறுத்தைகள்
-
அடங்காத 'வீலிங்' மோகம் பரவும் வீடியோ
-
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை விழா வள்ளி கல்யாண உத்சவம் கோலாகலம்