'நான் முதல்வன்' திட்டம் படுதோல்வி: பா.ம.க.,

சென்னை: 'நான் முதல்வன்' திட்டம் படுதோல்வி அடைந்துள்ளதாக பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழக அரசின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு திறன் பயிற்சி, வேலைவாய்ப்பு உதவிகள், போட்டி தேர்வுகளில் பங்கேற்க நிதியுதவி வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில், 2023ல், 1 லட்சத்து 35,137 பேர் சேர்ந்திருந்தனர். அவர்களிலும் வெறும் 8,517 பேருக்கு மட்டுமே வேலைகள் கிடைத்தன.
அதனால் தான் நடப்பாண்டில், இத்திட்டத்தில் வெறும் 11,865 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். நான் முதல்வன் திட்டம் படுதோல்வி அடைந்து விட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடக்கும் முறைகேடுகளும், குளறுபடிகளும் தான் தோல்விக்கு காரணம்.
நான் முதல்வன் திட்டத்திற்கு விளம்பரம் செய்வதில் காட்டிய அக்கறையில், 100ல் ஒரு பங்கை கூட, அத்திட்டத்தை பயனுள்ள முறையில் வடிவமைப்பதில் தி.மு.க., அரசு காட்டவில்லை. அதனால் தான் இத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
முழுமையான பா.ஜ.,வாகவே மாறிவிட்டார் பழனிசாமி; சண்முகம்
-
சிறுமியருக்கு பாலியல் துன்புறுத்தல்: மத போதகர் உட்பட மூவர் கைது
-
85 வயதிலும் சும்மா இருக்க மனமில்லை லட்சுமியம்மாவுக்கு!
-
'சாமி' படத்தில் வில்லனாக அறிமுகமான நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து
-
இது உங்கள் இடம்